மாங்க்ரோவ் காடுகளின் பயன்கள்:
"கோணமூக்கு உள்ளான், ஊசிவால் வாத்து, சாம்பல் தலை ஆள்காட்டி, மஞ்சள் வாலாட்டி, சோழக் குருவி, நீர் தாழைக் கோழி, நாமக் கோழி, தாமிர இலைக் கோழி, அரிவாள் மூக்கன், செந்நீலக் கொக்கு, கானான் கோழி, பவளக் கொத்தி என உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் வந்து போகும் இடம் இது. இங்கே வளர்ந்து நிற்கிற கோரைப் புல், இயற்கையான பயோ பில்டர். வேண்டாததை உறிஞ்சுவிட்டு, நல்லதை அப்படியே அரணாகப் பாதுகாக்கும். பறவைகள் இதில்தான் கூடு கட்டி வாழும். ஆனால் குப்பைகளைக் கொட்டிக் கொட்டி நச்சு நிலமாக்கிவிட்டார்கள். ஆமை, மீன் போன்ற உயிரினங்கள் மாசுபட்ட நீரிலும் வாழப் பழகிவிட்டன. ஆனால், அதைப் பிடித்து உண்கிற ஏழை மனிதனுக்குத்தான் புதுப்புது வியாதிகள் வருகின்றன" என்கிறார் சூழலியல் ஆர்வலரான திருநாரணன்.

தென்னிந்தியாவிலேயே பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ரொம்பவும் சிறப்பான பகுதி. சதுப்பு நிலமென்றால் ஆறு அடிக்கும் குறைவாக தண்ணீர் இருக்கும், உயிர் வலம் நிறைந்த குழைவான மண்ணுடன் இருக்கும். மாற்ற இடங்களில் உள்ள சதுப்பு நிலத்தில் உப்புத்தன்மை இருக்கும். ஆனால் பள்ளிக்கரணை ஒரு பக்கம் நல்ல தண்ணீர் உள்ள சதுப்பு நிலமாகவும் இன்னொரு பக்கம் உப்புத்தன்மை கலந்த சதுப்பு நிலமாகவும் இருக்கிறது. 114 வகையான பறவைகள், 46 வகையான மீன்கள், 29 வகையான புல் வகைகள், ஆமை, தவளை வகைகள், பாம்புகள், பட்டாம்பூச்சிகள் என வளமான பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதி.
அடைக்கலமாகும் வேர்கள்:
சுனாமி அலைகளால் உண்டான பேரழிவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள எதிர்காலத்தில் என்னென்ன செய்யலாம் என்று பல தரப்பினரிடம் இருந்து பல சிந்தனைகள் வந்த வண்ணம் உள்ளன. இதில், தமிழகக் கரையோர நெடுகிலும் பெரிய செயற்கைச் சுவர் எழுப்ப முதலமைச்சர் 2500கோடி வேண்டினார் என்று வாசித்தேன் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சதுப்புநிலக் காடுகளையும், மணல் மேடுகளையும் அமைக்கும் குறைந்த செலவினாலான திட்டம் வகுக்கிறார் என்று பி.கே. பாலசந்திரன் என்ற இந்திய ஊடகவியலாளர் இந்தூஸ்தான் டைம்ஸில் எழுதியதையும் வாசித்தேன். சுனாமி அலைகளை தடுப்பதில் செயற்கை சுவர்களை தமிழகக் கடலோரம் முழுவதும் கட்டினால் இயற்கை எழிலிழந்து விடும் என்பதோடு, வளம் பெருகாது, நிலம் பெருகாது, பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை என்கின்றார் திருமதி. மேனகா காந்தி. அவருடைய ஆங்கிலக் கட்டுரையில் முத்தான சில வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
"சுனாமி அலைகள் தாக்கிய பிறகு, நமக்கு கிடைத்த அறிவியல் பாடம் ஒன்றே. மணல் மேடுகளை சமப்படுத்தப்பட்ட கரையோரங்களில், பவழப்பாறைகள் உடைத்தெரியப்பட்ட கரைகளில் சேதம் அதிகமாகப் பார்கிறோம். மாலத்தீவில் கரையோரச் சுவர்கள் உதவவில்லையே!. துணைக்கோள் காட்டும் படங்களைப் பாருங்கள்; எங்கெல்லாம் சதுப்புநிலக் காடுகளும், பவழப்பாறைகளும் அழிக்கப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் இந்தியப்பூமியின் நிலப்பரப்பு குறைந்துள்ளது.. இயற்கை தரும் தடுப்புச் சுவர் சதுப்பு நிலக்காடுகள்"
"தமிழகத்தில் பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டை பகரும் பாடத்தை கேட்போம்! இவை ஐந்து கிராமங்கள் கரைக்கு 500 மீட்டருக்கு அருகே உள்ளன. கரையோரம் முழுக்க சதுப்பு நிலக்காடுகள். அலைகள் வத்தாலும், துளி தண்ணீர் கூட கிராமங்களுக்குள்ளே வரவில்லை."
உலகப்புகழ் பெற்ற வேளாணறிவியலாளர் டாக்டர். சுவாமிநாதன், சதுப்புநிலக் காடுகள் பற்றி சொல்லுகிறார், "அடர்ந்த மான்குரோவ் காடுகள் தடுப்புச் சுவர்களென நின்று கரையோர கிராமங்களை காத்துள்ளது! ஒரு கேடயமாக சுனாமியை தன்னகத்தே ஏற்று, அலைகளின் சீற்றத்தைத் தணித்து, அங்கு வாழும் மக்களை காத்துள்ளது". கடலுக்கும், நிலத்துக்கும் இடையே விளையும் தாவரங்கள் தான், மாங்ரோவுகள். அவற்றின் வேர்கள், வண்டல்களை சேர்த்து, நீரோட்டத்தை மிதப்படுத்தி, கடலலைகளால் உண்டாகும் நில அரிப்பை தடுக்கின்றன. நாளடைவில், வேர்கள் சேர்க்கும் வண்டல்களால் கரையோரம் நீட்டப்பட்டு நிலப்பரப்பு கூடுகிறது.
வழிந்தோடும் நீரை உறுஞ்சி, மாங்ரோவ் காடுகள் நிலத்தை, சூராவளி, அலைகள் மற்றும் வெள்ளத்திலிருந்து காக்கின்றது. இந்தக்காடுகள் மாசுக்களை வடிகட்டி, நீரின் தரத்தை உயர்த்துகின்றன. தெளிந்த நீர் கடலுக்குள் ஓடுவதால் பவழப்பாறை சார்ந்த சூழலமைப்பு செழிக்கிறது. மான்குரோவ் காடுகள் கடல் வாழ் உயிரினக்களுக்கு சத்தான உணவையும் தயாரிக்கின்றன. அலைகளால் இந்த உணவு ஆழி மட்டத்தில் உள்ள உயிரினக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மீனவனுக்கு மாங்குரோவ் இல்லயெனில், மீனும் இல்லை! எனவே, நாம் கடற்கரையோரங்களை நிலைப்படுத்தி, அரிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். கடலையே நம்பி பிழைக்கும் மீனவர்களுக்கு மறுவாழ்வமைப்பதோடு, பேரழிவிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். மாங்குரோவ் காடுகளை மீண்டும் நிறுவதால் இம்மூன்றையும் ஆற்ற முடியும். மாங்குரோவ் நாங்கே ஆண்டுகளில் காடுகளாகி விடும்.
பல அரசாங்கங்கள் மாங்குரோவ்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. பல ஆயிரம் ஹெக்றேர் பரப்பில் மாங்குரோவுகளை மீட்டுருவாக்க குயூபா அரசு மாங்குரோவ் நடும் நிறுவனங்ளை பணியில் அமர்த்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாடு 3000 கிலோ மீ கரையோரத்தில் மாங்குரோவை மீட்டுருவாக்கும் திட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளது. ஜாவாத் தீவில் மீனவர்களுக்கு 4-5 ஹெட்றேர் நிலம் அரசு வழங்கி, 20 சதவீதம் மாங்குரோவ் நட, கட்டாயப்படுத்தி உள்ளது. மீனவர் குடிகளே பெரும்பாலும் பாதிக்கபட்டுள்ளதை காண்கின்றோம். மீன் வளம் குன்றி வரும் நிலையில், மறுபடியும் அவர்களை வறுமையின் விளிம்பில் வைத்திருக்கும் தொழிலை ஆரம்பிப்பதை விட, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாம் அவர்களை ஏன் பிற தொழில்களிலும் ஈடுபடுத்தக் கூடாது? முதன்மையாக, மாங்குரோவ் நடுபவர்களாக மாற்றலாமே! இதன் மூலமாக அவர்களுக்கு முறையான நில உரிமையும் வழங்கப்படலாமே!.
No comments:
Post a Comment